[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா

அதிக விமானங்களை இயக்கி மும்பை ஏர்போர்ட் சாதனை!

mumbai-airport-sets-new-record

இருபத்தி நான்கு மணி நேரத்தில் 969 விமானங்களை இயக்கி, மும்பை சர்வதேச விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் முக்கியமானது மும்பை சர்வதேச விமான நிலையம். கடந்த ஆண்டு 45 மில்லியன் பயணிகளை கையாண்ட இந்த விமான நிலையம், மார்ச் 2018-க்குள் 48 மில்லியன் பயணிகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, ஒரே நாளில், அதாவது 24 மணி நேரத்தில் 969 விமானங்களை இயக்கி இந்த விமான நிலையம் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 935 விமானங்களை இயக்கியதே சாதனையாக இருந்தது.

‘ஒரே ரன் வே-யை பயன்படுத்தி இத்தனை விமானங்களை ஒரே நாளில் கையாண்டது சாதனைதான்’ என்று இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது. 

மூத்த விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘24 மணி நேரத்தில் ஆயிரம் விமானங்களை இயக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இந்த சாதனையை மும்பை விமான நிலையம் படைத்துள்ளது. முன்பு, ரன்வே காலியாக இருந்தால்தான் விமானம் இறங்க அனுமதி அளிக்கப்படும். இப்போது அப்படியில்லை. ஒரே நேரத்தில் இறங்கவும் விமானம் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close