[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

நடுக்கடலில் பயணிக்கு மாரடைப்பு:  ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

german-man-suffers-cardiac-arrest-on-board-ship

 

மும்பையில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு கப்பலில் பயணித்தவருக்கு நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து கடலோரக் காவல்படையினர் ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டனர்.

மும்பையில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு கப்பலில் பயணித்த 75 வயது ஜெர்மானிய பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் விரைந்து சென்று ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு, கோவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு செல்லும் அந்த சொகுசு கப்பலில் மொத்தம் 1,855 பயணிகள் இருந்தனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close