[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல நாட்டின் பிரதமர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கக்கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்ற
  • BREAKING-NEWS நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் - சிறுமி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன்
  • BREAKING-NEWS எனது மகளுக்கு ஏற்பட்டது போல் யாருக்கும் ஏற்படக்கூடாது - போரூர் சிறுமியின் தந்தை பாபு
  • BREAKING-NEWS சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு
  • BREAKING-NEWS தினகரன் தனது அணிக்கு குக்கர் சின்னம், பெயர் வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருந்த திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து -ஸ்டாலின்

பணமதிப்பு நீக்கம் பற்றி செயலியில் கருத்து சொல்லலாம்: மோடி தகவல்

125-crore-indians-fought-a-decisive-battle-and-won-pm-modi

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துக்களை என்எம் என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், கறுப்பு பண ஒழிப்புக்கு எதிரான 125 கோடி மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை ஆதரிக்கும் ‌மக்களுக்கு தலை வணங்குவதாக அவர் கூறியுள்ளார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பலன்கள் குறித்த 7 நிமிட குறும்படத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். கறுப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் NM என்ற ஆப் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மோடி குறிப்பிட்டுள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு புதிதாக வருமான வரி செலுத்தியோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 26 புள்ளி 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில்  புதிதாக வரி செலுத்தியோரின் எண்ணிக்கை 66 லட்சம் இருந்த நிலையில், தற்போது 84 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோன்று வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நபர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 27 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close