[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு கண்டனம்: நீதிமன்றத்தை நாடப்போவதாக காங்கிரஸ் அறிவிப்பு

president-s-rule-in-uttarakhand-congress-says-murder-of-democracy

உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ‌நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அக்கட்சி கூறியிருக்கிறது. உத்தரகாண்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ்‌ மூத்த தலைவர் அபிஷேக் மானு சிங்வி தெரிவித்துள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அம்பிகா சோனி சாடியுள்ளார்.

சிறிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது பிரதமர் மோடிக்கு கைவந்த கலையாகிவிட்டதாகவும் அம்பிகா குற்றம்சாட்டினார். உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகப் போவதாக அம்மாநில முதலமைச்சர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். அரு‌ணாச்சலப்பிரதேசம், உத்தரகாண்டைத் தொடர்ந்து மணிப்பூர் அரசையும் கவிழ்க்க நரேந்திர மோடி அரசு முனைப்புக் கொண்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close