[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

'ரூபாய் மதிப்பிழப்பு பொருளாதாரத் திருட்டு'... மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சா‌ட்டு

rahul-ganthi-accusation-on-demonization

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு அறிவிப்பு, ஊழலுக்கோ, கறுப்புப் பணத்துக்கோ எதிரான நடவடிக்கை அல்ல என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் அல்மோரா நகரில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது, பொருளாதாரத் திருட்டு என்று குற்றம்சாட்டினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி பிரதமர் மோடி மீது ராகுல் குற்றம்சாட்டியதற்கு பாரதிய ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆதாரங்களை வெளியிடுமாறு அவர்கள் வலியுறுத்திய நிலையில், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பெரிய நிறுவனங்கள் மோடிக்கு லஞ்சம் வழங்கியதாகக் கூறியதற்கும் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.‌ இந்நிலையில், ரூபாய் மதிப்பிழப்பு பொருளாதார திருட்டு என ராகுல் இப்போது தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close