[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

’புதிய ரூபாய் நோட்டுகள் குறைவாகத்தான் வரும்’.. அருண் ஜேட்லி தகவல்

not-all-scrapped-currency-will-be-remonetised-hints-arun-jaitley

திரும்பப் பெறப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை விட குறைவான மதிப்பிலேயே புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

கருப்புப்பண ஒழிப்பு மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிப்பதற்காக புழக்கத்தில் உள்ள ரூ.15.44 கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். கருப்புப்பணத்தின் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று வர்ணிக்கப்படும் இந்த நடவடிக்கையால் புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஃபிக்கி அமைப்பின் கருத்தரங்கில் பேசிய அருண் ஜேட்லி, மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பை விட குறைவான அளவே புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்றார். இதன் மூலம் ரூபாய் நோட்டுகளின் புழக்கத்‌தில் ஏற்படும் பற்றாக்குறை, மின்னணு பணப்பரிமாற்‌ற முறைகள் மூல‌ம் ஈடுகட்டப்படும் என்றார். போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் நடைமுறைக்கு நீண்ட காலம் ஆகாது என்றும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close