[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

முக்கிய அலுவல்கள் நடக்காமல் முடிந்த குளிர்கால கூட்டத்தொடர்

parliament-s-winter-session-washout-is-huge-disappointment-for-125-crore-indians

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த நவம்பர் 16ம் தேதி துவங்கிய கூட்டத்தொடர் முக்கிய அலுவல்கள் நடைபெ‌றாமல் ஏமாற்றத்துடன் முடிந்திருகிறது.

நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தின் 241வது கூட்டத்தொடர் ஆகும். 21 அமர்வுகளை கொண்ட இந்த தொடரில், ‌‌நாடாளுமன்ற இரு அவைகளும் 22 மணிநேரங்களுக்கு மேலாக அமர்ந்துள்ள‌‌ன. பல்வேறு விவகாரங்களை முன் வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஏறக்குறைய 86 மணிநேர அலுவல் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு விவகாரம், காவிரி மேலாண்மை வாரிய கோரிக்கை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், சேலம் உருக்காலை விவகாரம், வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள், சொகுசு விமானங்கள் வாங்கியதில் ஊழல் உள்ளிட்ட பல விவகாரங்களை முன்வைத்து நாடாளுமன்ற‌ இரு அவைகளிலும் அமளி‌கள் நீடித்தன. இவற்றில் ரூபாய் நோட்டு விவகாரம் பிரதானமாக இருந்தது.

கூட்டத்தொடரின் முதல் நாளில் அவையின் வழக்கமான அலுவலை ஒத்திவைத்து விதி எண் 267ன் கீழ் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு ‌‌கட்சிகளை சேர்ந்த 14 உறுப்பினர்கள் பங்குபெற்றனர். விவாதத்தில் இதுவரை முடிவு ஏதும் எட்டப்படவில்லை. அரசு தரப்பில் கொண்டுவரப்பட்ட மசோதாக்களில் மாற்று திறனாளிகள் மசோதா 2014 மற்றும் வருமான வரி சட்டத்திருத்தம் 2016 மசோதாக்கள் மட்டும்‌ இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.தனிநபர் மசோதாக்களோ அல்லது தீர்மானங்களோ ஒன்று கூட விவாதிக்கப்படவே இல்லை. அதே நேரம் 12 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நடப்பு கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் நாடாளுமன்ற நிலைக்குழு சார்பாக 116 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2015 -2016 ம் ஆண்டுக்கான பல்கலைக் கழக மானிய குழுவின் அறிக்கை,ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரம் குறித்த ஆணையத்தின் அறிக்கை,சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு குறித்த ஆண்டு அறிக்கை, 2015 -2016ம் ஆண்டுக்கான சி.ஏ.ஜி அறிக்கை, கு‌ழந்தைகள் உரிமைகள் தொடர்பான தேசிய ஆணையத்தின் ஆண்டு அறிக்கை உள்ளிட்ட பலவேறு முக்கிய அறிக்கைகள் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நடப்புக் கூட்டத்தொடரில் 330 கேள்விகள் மற்றும் 3,517 துணை கேள்விகளுடன் கூடிய கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு பதிலும் அளிக்கப்பட்ட‌ன. 2 கேள்விகளுக்கு மட்டும் வாய்மொழியாக பதில் அளிக்க முடிந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close