[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு

செல்போன் மூலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி

pm-modi-addresses-rally-over-the-phone-after-poor-weather-prevented-his-chopper-from-landing-in-up-s

உத்தரப்பிரதேசத்தின் பாரைச் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி செல்போன் மூலம் உரையாற்றினார்.

தேர்தல் நெருங்கும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக லக்னோவுக்கு விமானம் மூலம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடக்கும் பாரைச் பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். மோசமான வானிலை காரணமாக பாரைச் நகரில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால், மீண்டும் அவர் லக்னோ திரும்பினார். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் அவர் செல்போன் மூலம் பேசினார். ரூபாய் நோட்டுகள் மீதான மத்திய அரசின் நடவடிக்கையால் உத்தரப்பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி மற்றும் மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்ல வறுமையையும், ரவுடிகளின் ஆதிக்கத்தையும் வேரறுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பேசினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close