[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

மேற்குவங்க சுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிப்பு... நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

tmc-raises-the-issue-of-army-deployment-in-west-bengal-in-parliament-two-houses

மேற்குவங்க சுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிக்கப்பட்டது தொடர்பாக, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 16ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே, ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சிகள் அவையை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றன.

இந்நிலையில் இன்று வழக்கம் போல காலை 11 மணிக்கு மக்களவை கூடிய போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், மேற்குவங்க சுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிக்கப்பட்ட விவகாரத்தை எழுப்பினர். இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்து பேசுகையில், சுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிக்கப்படுவது வழக்கமான நடவடிக்கை தான் என தெரிவித்தார்.

மேலும் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் 19 மற்றும் 21 ஆகிய ராணுவ முகாம் நடைபெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் மத்திய அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய திரிணாமூல், மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவரின் இருக்கை அருகே எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களுக்கு அவை துணைத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இருப்பினும் ராணுவம் குவிக்கப்பட்ட விவகாரத்தில் மாநில அரசின் ஒப்புதல் ஏன் பெறப்படவில்லை என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள் அமளியை கைவிடவில்லை. இதனிடையே, சேலம் உருக்காலை பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யும் முடிவுக்கு திமுக எம்.பி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close