[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் 24-ஆம் தேதி வரை சுங்கக்கட்டணம் ரத்து

no-charges-on-tollgate-upto-november-24

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடை வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதன் காரணமாக ஏற்பட்ட சில்லறை தட்டுப்பாட்டு பிரச்னையால் இன்று வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டடணம் ரத்து செய்யப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வாகன போக்குவரத்து சீராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கக் கட்டணம் ரத்து உத்தரவு வரும் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் சில்லறை தட்டுப்பாடு இன்னும் நிலவி வருவதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close