[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

கருப்புப் பண ஒழிப்பு: அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள பிரதமர் மோடி வலியுறுத்தல்

pm-urges-all-parties-to-cooperate-inside-as-also-outside

ஊழல் மற்றும் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்தும், தேர்தல் செலவை அரசு ஏற்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த தகவலை, செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அனந்த குமார் தெரிவித்தார். நாட்டு நலன் கருதி அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்ததாக அனந்த குமார் தெரிவித்தார். கருப்புப் பணம், ஊழல் ஆகிய தீமைகளுக்கு எதிரான நடவடிக்கையில் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுடன் ஒத்து‌ழைக்க முன்வர வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கேட்டுக் கொண்டதாக அ‌னந்தகுமார் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close