[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு எதிரொலி.... வங்கிகளை முற்றுகையிட்ட மக்கள்

massive-queues-at-banks-millions-rush-to-exchange-banned-rs-1-000-and-500-notes-10-points

ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற லட்சக்கணக்கான மக்கள் வங்கிகளில் காலை முதலே குவிந்து வருகின்றனர்.

கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையாகக் கூறப்படும் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த அறிவிப்பால் வங்கிகளில் ஏற்பட்ட மக்கள் கூட்டத்தை சமாளிக்க ஆயிரக்கணக்கான பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், பெரும்பாலான வங்கிகளின் வேலைநேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணம் குறித்த தகவல்கள் கண்காணிக்கப்படும் என்றும், வருமானத்துக்குப் பொருந்தாத தொகை டெபாசிட் செய்யப்பட்டால், வருமான வரியுடன் சேர்த்து 200 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

* இந்த அறிவிப்பினால் சிறுவணிகர்களுக்குப் பாதிப்பில்லை என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டத்துக்குப் புறம்பான வகையில் பணம் வைத்துள்ளவர்களே பாதிக்கப்படுவர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

* மக்களின் வசதிக்காக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த செவ்வாய்கிழமை இரவு அறிவித்தார். இதையடுத்து ஏடிஎம் மையங்களை நோக்கி நள்ளிரவு வரை மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். அவர்களில் சிலருக்கு குறைந்த அளவு பணம் கிடைத்தாலும், லட்சக்கணக்கானோருக்கு பணம் கிடைக்காமலேயே வீடு திரும்பினர்.

* புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் நாளை முதல் கிடைக்கும் என்று தெரிகிறது. புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கி கவுண்டர்களில் மட்டுமே கிடைக்கும் என்றும், மெட்ரோ நகரங்களில் மட்டுமே இது கிடைக்கு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

* வங்கிகளில் ஒரு நாளைக்கு ரூ.10,000 மற்றும் ஏடிஎம் மையங்களில் ஒருநாளைக்கு ரூ.2,000 என்ற அளவில் மட்டுமே சில நாட்களுக்கு வாடிக்கையாளர்களால் எடுக்க முடியும் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த வரம்பு விரைவில் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் இன்று (நவம்பர் 10) முதல் டிசம்பர் 30 வரை டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close