[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

அதிகரிக்கும் காசநோய்.. கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டம்

govt-plans-nationwide-survey-on-tb-after-who-says-india-underestimating-the-deadly-disease

இந்தியாயில் காசநோய் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து தேசிய அளிவில் காசநோய் குறித்த கணக்கெடுப்பை அரசு நடத்த உள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு உலக சுகாதார அறிக்கையின் படி, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10.4 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் காசநோய் குறித்த கணக்கெடுப்பை அரசு மேற்கொள்ள உள்ளது. அடுத்த ஆண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முன்னதாக, கடந்த 1956-ஆம் ஆண்டு காசநோய் குறித்த கணக்கெடுப்பை அரசு நடத்தியிருந்தது.

இதுகுறித்து பேசிய, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, காசநோயால் இறப்பது குறைந்திருந்தாலும், காசநோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘டியூபர்செல் பாசிலஸ்’ எனும் கிருமியால் வரும் நோய் தாக்கத்தின் பெயர் ‘டியூபர் குளோசிஸ்’ இதன் சுருக்கம் தான் ‘டிபி’ எனும் காசநோய். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதும் காசநோய் வருவதற்கு காரணம். நெஞ்சுப் பகுதி முழுவதும் சளி சேர்ந்து, பாதிக்கப்பட்டோரை உருக்குலைத்து விடக்கூடியது அபாய நோய் காசநோய் ஆகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close