நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களிலும், தேசிய நினைவுச்சின்னங்களிலும் இன்று முதல் பாலித்தீன்கள் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் தொடங்கப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டம் தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இத்திட்டத்தை மேலும் தீவிரபடுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களிலும், தேசிய நினைவுச்சின்னங்களிலும் இன்று முதல் பாலித்தீன்கள் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், ‘தேசிய நினைவுச்சின்னங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பாலித்தீனுக்கு தடை அமலில் இருக்கும். நுழைவாயிலில் உள்ள காவலாளிகள், சுற்றுலா பயணிகளிடம் பாலித்தீன் உள்ளதா என்று பரிசோதித்து அனுப்புவார்கள். இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது பற்றி ஒரு மாதத்துக்கு பின் முடிவு செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா!!
குல்பூஷண் வழக்கு: பாக்.கோரிக்கையை நிராகரித்த சர்வதேச நீதிமன்றம்
இம்ரான் கானின் புல்வாமா தாக்குதல் கருத்திற்கு இந்தியா பதிலடி
மேஜரின் இறுதி ஊர்வலத்தில் ‘ஐ லவ் யூ’ எனக் கதறி அழுத மனைவி
மதுரை விமான நிலையத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக ! என்ன சொல்கிறது வரலாறு ?
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புல்வாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?