[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

கருணைக்கொலை செய்யக்கோரி மாற்றுத்திறனாளி பெண் பிரதமர் மோடிக்குக் கடிதம்

differently-abled-laxmi-requests-pm-modi-for-euthanasia

அரசு வேலை கிடைக்காததால் மனமுடைந்த மாற்றுத்திறனாளி பெண் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலை சேர்ந்தவர் லட்சுமி யாதவ். மாற்றுத் திறனாளியான இவர் எம்.பில் மற்றும் எல்.எல்.எம் பட்டம் பெற்றவர். இவர் அரசு வேலைக்காக காத்திருந்து வேலை கிடைக்காமல் மனமுடைந்ததால் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு தன்னை கருணைக்கொலை செய்துவிடுமாறு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மத்திய பிரதேச மாநில அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு இருந்த போதிலும் எனக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. எனது இரண்டு கால்களையும் இழந்து எவ்வித வாழ்வாதாரமும் இன்றி மிகவும் சிரமத்தில் இருக்கிறேன். எனவே எண்ணை கருணைக்கொலை செய்ய அனுமதி தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை அறிந்த மத்திய பிரேதேச மாநில அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

அரசு வேலை பெறுவதற்காக தேவையான பயிற்சி வகுப்புக்களுக்கு அவர் செல்ல விரும்பினால் தான் உதவி செய்ய தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close