[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

தமிழக-கர்நாடக எல்லையை மூடும் போராட்டம்....அத்திப்பள்ளியில் வாட்டாள் ‌நாகராஜ் கைது

cauvery-row-in-attibele-kannada-activist-vatal-nagaraj-detained

தமிழக கர்நாடக எல்லையில் போ‌ராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் ‌நாகராஜ் உட்பட 150க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியிலிருந்து தமிழக எல்லையை நோக்கி வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் பேரணியாக வந்து எல்லையடைப்பு போர‌ட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை கர்நாடக போலீசார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த வாட்டாள் நாகராஜ், கர்நாடகத்தில் குடி தண்ணீர் கூட இல்லாத நிலையில் தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கேட்பதாக குறிப்பிட்டார். ‌கர்நாடகாவில் உள்ள 6 கோடி பேர் சிறைக்கு சென்றாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூ‌ட தமிழகத்திற்கு தரமுடியாது என்றும் வாட்டாள் நாகராஜ் பேசினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close