[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

பிளஸ்டூ முடித்தவர்கள் இந்திய கடற்படையில் சேரலாம்! 

join-indian-navy-as-a-sailor-plus-2-passed-male-candidates-can-apply

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய Sailor எனப்படும் மாலுமி பணிக்கான பிப்ரவரி - 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: மாலுமி
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் (Artificer Apprentice) (AA)
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் (Senior Secondary Recruit) (SSR) 

காலியிடங்கள்:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் - 500
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் - 2,200
மொத்தம் = 2,700 காலியிடங்கள் 

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 28.06.2019 (இன்று)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2019

வயது வரம்பு: 
விண்ணப்பிக்க விரும்புவோர் 01.02.2000 மற்றும் 31.01.2003 என்ற தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.205
குறிப்பு: 
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
2. ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும். 

கல்வித்தகுதி:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட்: 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயின்று குறைந்தபட்சமாக 60%மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.joinindiannavy.gov.in/ - என்ற இணையதள முகவரியில் சென்றுவிண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: 
1. கணினி வழித்தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. மருத்துவ தகுதி தேர்வு

பயிற்சிக் காலம்:
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ் - 9 வாரங்கள்
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட் - 22 வாரங்கள்

ஊக்கத்தொகை:
தொடக்கக்கால பயிற்சியின் போது ரூ.14,600 மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி முடிவுக்கு பின் பல்வேறு சலுகைகளும், திறமைக்கேற்ற பணியும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழுத்தகவல்களை பெற, https://www.joinindiannavy.gov.in/files/event_attachments/AA-SSR_022020.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close