[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

நீட் தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்

the-national-testing-agency-will-release-neet-admit-card-from-today

நாடு முழுவதும் மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

நீட் தேர்வுக்கு நாடு முழுவதிலுமிருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயி‌ரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வு 154 நகரங்களில் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் மட்டும் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கரூர், நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில்‌ ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மா‌ணவ, மாணவிகளுக்கு தேர்வு மையங்கள் தமிழகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close