[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை!

ssc-conducts-exams-for-junior-engineer-post-qualification-b-e-diploma

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் ஜுனியர் இன்ஜினியர் பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதில் சென்ட்ரல் வாட்டர் கமிஷன், மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ், சென்ட்ரல்
வாட்டர் & பவர் ரிசர்ச் ஸ்டேசன் இது போன்ற 9 மத்தியரசின் பல்வேறு  துறைகளில் பணிபுரிவதற்குதகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
1. ஜுனியர் இன்ஜினியர் (மெக்கானிக்கல்)
2. ஜுனியர் இன்ஜினியர் (சிவில்)
3. ஜுனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)
4. ஜுனியர் இன்ஜினியர் (குவாண்டிடி சர்வேயிங் & கான்ட்ராக்ட்ஸ்)

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய நாள்: 01.02.2019 முதல் 25.02.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 27.02.2019, மாலை 05.00 மணி
ஆஃப்லைனில் தேர்வுக்கட்டணத்தை செலுத்த கடைசி நாள்: 28.02.2019, மாலை 05.00 மணி
முதற்கட்ட கம்யூட்டர் வழித்தேர்வு (Paper - I) நடைபெறும் நாள்: 23.09.2019 முதல் 27.09.2019
இரண்டாம் கட்ட(Paper - II) தேர்வு நடைபெறும் நாள்: 29.12.2019

தேர்வுக்கட்டண விவரம்: 
செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம்: ரூ. 100
பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, PWD, முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் (SBI Challan) தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.

சம்பளம்: 
மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை

வயது வரம்பு: (01.08.2019க்குள்)
1. சென்ட்ரல் வாட்டர் கமிஷன் (CWC) மற்றும் சென்ட்ரல் பப்ளிக் வெர்க்ஸ் டிபார்ட்மெண்ட் (CPWD) போன்ற
 துறைகளுக்கு - அதிகபட்சமாக 32 வயது இருக்க வேண்டும்.
2. டிபார்ட்மெண்ட் ஆப் போஸ்ட் மற்றும் மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் போன்ற துறைகளுக்கு -
அதிகபட்சமாக 27 வயது இருக்க வேண்டும்.
3. மற்ற 5 துறைகளுக்கும் - அதிகபட்சமாக 30 வயது இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம்:
1. ஜுனியர் இன்ஜினியர் (மெக்கானிக்கல்) என்ற பணிக்கு,  பி.இ - மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்ற பட்டத்தை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது 3 - வருட டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்று, கூடுதலாக 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல்வேண்டும்.
2. ஜுனியர் இன்ஜினியர் (சிவில்) என்ற பணிக்கு, பி.இ - சிவில் இன்ஜினியரிங் என்ற பட்டத்தை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது 3 - வருட டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் பயின்று, கூடுதலாக 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
3. ஜுனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) என்ற பணிக்கு, பி.இ - எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் என்ற பட்டத்தை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) 3 - வருட டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பயின்று, கூடுதலாக 2 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல்வேண்டும்.
4. ஜுனியர் இன்ஜினியர் (குவாண்டிடி சர்வேயிங் & கான்ட்ராக்ட்ஸ்) என்ற பணிக்கு,  3 - வருட டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் பயின்று, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது இன்ஸ்டிடியூட் ஆப் சர்வேயர்ஸ் மூலம் நடத்தப்படும் கட்டிடவியல் மற்றும் குவாண்டிடி சர்வேயிங் என்ற இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
1. முதலில் SSC - யின் (https://ssc.nic.in/) இணையத்திற்கு சென்று நிரந்தர பதிவு முறையில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
2. சிறிது நேரத்தில் நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும், மெயில் ஐடி-க்கும் Username & Password வரும்.
3. பிறகு https://ssc.nic.in/ - என்ற இணையத்தில் சென்று உங்களுக்கான Username & Password - ஐ தெளிவாக கொடுத்து login செய்து, apply - ஐ கிளிக் செய்து மீதமுள்ள தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், இது குறித்த முழு தகவல் பெற,
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_jemec_01022019.pdf - என்ற இணையத்தில் சென்று அறியலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close