[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைகிறது

participants-in-the-engineering-consultation-is-reduced-by-day

பொறியியல் கலந்தாய்வில் ‌‌12 நாட்கள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், பங்கேற்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

நீட் தேர்வின் தாக்கத்தால் கட் ஆஃப் மதிப்பெண் நிலையில் உயர்வைக் கண்ட பொறியியல் கலந்தாய்வில் இதுவரை 53 ஆயிரத்து 856 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொறியியல் படிப்பிற்கான ஆர்வம் ஆண்டாண்டுக்கு குறைகிறதுதான் என்றாலும், முன்னணி கல்வி நிறுவனங்களுக்கான போட்டியில் எந்தக் குறைவும் இல்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் இருந்த 8 ஆயிரத்து 306 இடங்களில் 81 சதவிகித இடங்கள் அதாவது, 6 ஆயிரத்து 705 இடங்கள் நிரம்பிவிட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 5 ஆயிரத்து 939 இடங்களில் 99 சதவிகித இடங்களான 5 ‌ஆயிரத்து 901 இடங்கள் நிரம்பிவிட்டன. தனியார் கல்லூரிகளில் மொத்தமிருந்த 1 லட்சத்து 6124 இடங்களில் 41 ஆயிரத்து 250 இடங்கள் நிரம்பியுள்ளன. அதாவது 25 சதவிகித இடங்கள் மட்டும் நிரம்பியிருக்கின்றன.
12 நாள் கலந்தாய்விற்கு மொத்தம் 79 ஆயிரத்து 919 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் 32 சதவிகிதமான 25 ஆயிரத்து 711 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. முதல் நாளில் 19 சதவிகிதமாக இருந்த கலந்தாய்வில் பங்கேற்காதோர் எண்ணிக்கை, 12ஆவது நாளில் 39 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகிறது. மொத்தமுள்ள 1 லட்சத்து 75 ஆயிரத்து 399 பொதுப் பிரிவு இடங்களில் மீதமுள்ள 1 லட்சத்து 21 ஆயிரத்து 483 இடங்களுக்கு இன்னும் 8 நாட்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close