[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை சம்பவம்: விசாரணையில் முன்னேற்றம் இல்லை

train-bank-money-robbery-case-no-progress-in-investigation

ரயில் கொள்ளை வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், கொள்ளைபோன பெட்டிகளை தடவியல் துறை ஆய்வுக்கு சிபிசிஐடி போலீசார் அனுப்பியுள்ளனர்.

சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த ரயிலின் பெட்டியில் துளையிட்டு 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையின் போது உடைக்கப்பட்ட 2 மரப்பெட்டிகளை எழும்பூர் ரயில்வே பார்சல் அலுவலகத்தில் தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு 20,16 எண் கொண்ட அந்த மரப்பெட்டிகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டிருந்தது. விசாரணைக்கு தேவைப்பட்டதால், அந்த மரப்பெட்டிகள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் 2 மரப்பெட்டிகளை ஆய்வுக்காக மயிலாப்பூரில் உள்ள தடயஅறிவியல் துறைக்கு இன்று அனுப்பி வைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close