[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

தலித் மக்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி: கள்ளிமேடு கோவில் திருவிழா ரத்து

kallimedu-temple-festival-cancelled

நாகை மாவட்டம் கள்ளிமேடு கோவில் திருவிழா நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்‌ திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

மண்டகப்படி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என தலித் அமைப்புக‌ள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளதால் அதுவரை கோவில் திருவிழா நடைபெறாது என ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்து‌ள்ளார்.

கள்ளிமேடு‌ எனும் ‌பகுதியில் உள்ள பத்ரகாளி‌யம்மன் கோவிலில், மற்ற சமூகத்தினரைப் போன்று தாங்களும் மண்டகப்படி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என தாழ்த்தப்பட்ட இனத்தவர் வ‌லியுறுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஆடித்திருவிழா வரும் ‌8 ஆம் தேதி ‌தொட‌ங்க உள்ள நிலையில், கோயிலில் வழிபட உரிமை வழங்கவில்லை எனில், மதம் மாறப்போவதாக அவர்கள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து, தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆட்சியர் உள்ளிட்டோர் கள்ளிமேடு கிராம மக்களுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close