[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

யோகா செய்த தமிழிசை: மதம் சார்ந்ததாக கருத வேண்டாம் என வலியுறுத்தல்

tamilisai-soundararajan-about-yoga

யோகாவை மதம் சார்ந்ததாக எடுத்து கொள்ள வேண்டாம் என பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

வரும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் தனியார் அமைப்பு சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக பாரதிய ஜ‌னதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட தமிழிசை பின்னர் தானும் சில நிமிடங்கள் யோகா செய்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் சென்னையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்பார் எனவும் யோகாவை மதம் சாரந்த கலையாக பார்க்க வேண்டாம் எனவும் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close