[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நண்பன் தண்ணீரில் மூழ்கியதை கவனிக்காமல் செல்ஃபி: மாணவர் உயிரிழப்பு

selfies-student-unnoticed-death-submerged-friend

தண்ணீரில் மூழ்கும் நண்பனை கவனிக்காமல் செல்ஃபி எடுத்ததால் 17 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

பெங்களூரு அனுமந்தநகரில் வசித்து வருபவர் கோவிந்த், ஆட்டோ டிரைவர். இவரது மகன் விஷ்வாஸ். இவர், பசவனகுடி நேஷனல் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படையில் விஷ்வாஸ் சேர்ந்திருந்தார். கடந்த 23ஆம் தேதி அந்த கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை சார்பில் ராமநகர் மாவட்டத்தில் நடந்த முகாமிற்கு விஷ்வாஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றிருந்தார்கள். அவர்களை கிரீஷ் என்ற விரிவுரையாளர் அழைத்து சென்றிருந்தார்.

ராமநகர் மாவட்டத்தின் அருகே உள்ள ரவகோண்ட்லு பெட்டா என்ற மலைப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் என்.சி.சி பயிற்சிக்காக முகாமிட்டிருந்தனர். இந்நிலையில், விடுமுறை காரணமாக அருகில் உள்ள ஏரி ஒன்றுக்கு மாணவர்கள் குழுவாக குளிக்க சென்றுள்ளனர். ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் தனது மொபைலில் அனைவரையும் செல்ஃபி எடுத்துள்ளார். செல்ஃபி எடுக்கும் நேரத்தில் குளித்துக்கொண்டிருந்த விஷ்வாஸ் தண்ணீரில் தத்தளித்த படி மூழ்கியுள்ளார். ஆனால், செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் இருந்ததால் அவர் மூழ்குவதை மற்றவர்கள் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, விஷ்வாஸை காணாததால் நண்பர்கள் அனைவரும் தேடியுள்ளனர். இதற்கிடையில், ‘செல்ஃபி‘ எடுத்த புகைப்படங்களை செல்ஃபோனில் ஒரு மாணவர் பார்த்தபோது, மற்ற மாணவர்களுக்கு பின்னால் குளத்தில் விஷ்வாஸ் மூழ்குவது தெரிந்தது. இதுபற்றி உடனடியாக ககலிபுரா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து குளத்தில் இருந்து விஷ்வாஸ் உடலை மீட்டார்கள். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று மதியம் விஷ்வாஸின் உடலை அவரது உறவினர்கள் நேஷனல் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உடலை உள்ளே எடுத்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் கல்லூரி நிர்வாகம், விஷ்வாஸ் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விஷ்வாஸ் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும், அவரது உறவினர்களிடம் போலீஸார் கூறினர்.

சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்ததை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர். இந்த நிலையில் பலியான விஷ்வாஸின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விரிவுரையாளர் கிரீஷ் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து ககலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கிரீஷை தேடிவருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close