[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கும்பகோணத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் சந்தேக மரணம்: காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

vck-holds-protest-over-allegeded-lockup-death-in-kumbakonam

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தார்.

கும்பகோண‌ம் அருகே திருப்புறம்பியத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை குழந்தை கடத்தல் தொடர்பான விசாரணைக்காக காவல்துறையினர் இரவில் அழைத்துச் சென்றனர். விசாரணை முடித்த பின்னர் அவரை நள்ளிரவு 2 மணியளவில் விடுவித்ததாக கூறப்பட்ட நிலையில், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் செல்வராஜ் சுருண்டு விழுந்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் அவர் உயிரிழந்தார்.

காவல்துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான வகையில் அவர் உயிரிழந்ததால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித உரிமை மீறலுக்கான கூட்டு இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் கும்பகோணம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஊர்வலமாக முழக்கமிட்டுச் சென்ற அவர்களிடம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி சீனிவாச பெருமாள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close