[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

கணவன் கண்முன் புதுப்பெண்ணை கொன்று கொள்ளை: நள்ளிரவில் பயங்கரம்!

robbers-loot-newly-wed-couple-kill-bride-on-nh58-near-meerut

கணவன் கண்முன்னே, புதுமணப்பெண்ணை கொன்று நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர் நகரில் உள்ள மிம்லானா சாலையை சேர்ந்தவர் சாஜேப். இவருக்கும் காஸியாபாத் அருகில் உள்ள நாகல் கிராமத்தைச் சேர்ந்த பஹ்ரானாவுக்கும்  திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து இரண்டு பேர் குடும்பத்தினரும் மிம்லனாவுக்கு காரில் நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் தேசிய நெடுஞ்சாலை 58 வழியாக வந்துகொண்டிருக்க, இவர்களது உறவினர்கள், மேலும் சில கார்களில் வேறு வழியாக திரும்பிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பர்தாபூர் அருகே சாலையோரத்தில் இருந்த ஓட்டலில் சாப்பிடுவதற்காக புதுமண தம்பதியர் காரை நிறுத்தினர். சாப்பிட்டுவிட்டு ஊருக்குத் திரும்பினர். அவர்கள் காரை ஒரு கார் விரட்டிக்கொண்டு வேகமாக வந்துகொண்டிருந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இவர்களின் காரை, மறித்தபடி அந்த கார் வந்து நின்றது. அது பரேலி அருகிலுள்ள மட்டோர் கிராமம். 

அந்தக் காரில் இருந்து 4 பேர் இறங்கினர். அவர்கள் கையில் துப்பாக்கி.  திருமண கோஷ்டியை கீழே இறக்கி, நகைகள் மற்றும் பணத்தைப் பறித்தனர். பின்னர் காருக்குள் புதுப்பெண் தனியாக இருந்ததைப் பார்த்த அவர்கள், நகைகளை கழற்றச் சொல்லிக் கேட்டனர் அவரிடம். அவர் மறுத்ததும் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டனர். பின்னர் நகைகளை கழற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து சஜேப் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். வேறு வழியில் வந்துகொண்டிருந்த அவர்கள், இங்கு வந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு ரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்த பஹ்ரானாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த போலீசார், சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இதே பகுதியில் பலமுறை கொள்ளை சம்பவங்களும் கொலை சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை டெல்லி, டேராடூன், ஹரித்வார் போன்ற பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை என்பதால், இங்கு போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close