[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
  • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
குற்றம் 04 Nov, 2017 04:17 PM

போதையில் கர்ப்பிணியை உதைத்த கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது!

cpi-m-leader-assaults-pregnant-woman-cops-arrested

போலீஸ்காரர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்ணை போதையில் எட்டி உதைத்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் அண்டோனியா வில்லியம்ஸ். இவர் தனது நண்பர்களுடன் போதையில் கடந்த வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற வாகனத்தை, கார் ஒன்று உரசிவிட்டு சென்றது. இதையடுத்து அந்த காரை விரட்டிச் சென்ற வில்லியம்ஸ், மறித்தார். பின்னர் காரில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணை வெளியே இழுத்தாராம். மருத்துவமனைக்குச் செல்வதாகவும் தன்னை விட்டுவிடும்படியும் சொன்னாராம் அந்தப் பெண். ஆனால் போதையில் இருந்த அவர் வயிற்றில் எட்டி உதைத்தார். இதில் அந்த கர்ப்பிணி கீழே சரிந்தார். அப்போது அந்தப் பகுதியில் வந்தவர்கள் தட்டிக்கேட்டார்களாம். ஆனால், அவர்களை வில்லியம்ஸ் எச்சரித்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்ந்த அந்தக் கர்ப்பிணிப் பெண், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் உள்ளூர்க்காரர்கள் உதவியுடன் வில்லியம்ஸை இன்று கைது செய்தனர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான வில்லியம்ஸ், பஞ்சாயத்து உறுப்பினராக இருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனிலும் தகராறில் ஈடுபட்ட அவர், போலீஸ்காரர்களை தாக்கியுள்ளார். தொலைதூர பகுதிக்கு டிரான்ஸ்பர் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கொல்லம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறியுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close