[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

இளம்பெண்ணை 23 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

23-men-allegedly-rape-delhi-woman-in-bikaner

டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ராஜஸ்தானில் 23 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

டெல்லியை சேர்ந்தவர் 28 வயது இளம் பெண். இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதியில் சொந்தமான காலி மனை ஒன்று உள்ளது. இதைப் பார்ப்பதற்காக கடந்த திங்கட்கிழமை அங்கு சென்றார். பார்த்துவிட்டு டெல்லி திரும்புவதற்காக ஜெய்ப்பூர் சாலையில் உள்ள காருஷ்யாம் மந்திர் அருகே பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்றில் இருந்து இறங்கிய 2 பேர், அவரை கடத்தினர். மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் தங்கள் நண்பர்கள் ஆறு பேரை போனில் அழைத்தனர். 
அவர்கள் பலானா என்ற கிராமத்துக்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்துள்ளனர். அங்கு இன்னும் சிலரும் அவரை வன்கொடுமை செய்துள்ளனர். மொத்தம் 23 பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மறு நாள் அதிகாலை 4 மணிக்கு சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். 
இதுபற்றி அந்தப் பெண் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close