[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

லஞ்சம் வாங்கினாரா நகராட்சி ஆணையர்?: வாட்ஸ்ஆப்பில் பரவும் வீடியோ காட்சி

whatsapp-video-municipal-commissioner-taking-bribe

சிவகங்கையில் நகராட்சி ஆணையர் லஞ்சம் பெற்றதாக வீடியோ காட்சிகள் வாட்ஸ்ஆப்பில் வெளியாகியுள்ளது.

தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில், நிழற்மேற்கூரை அமைக்க நகராட்சி சார்பில் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. பணிமுடிந்து அதற்கான காசோலையை வழங்குவதற்கு நகராட்சி ஆணையர் சக்திவேல் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் சக்திவேல் ஒப்பந்ததாரர் அலுவலகத்திற்குற்கு வந்து 4 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்து விட்டு, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

இது அந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு வீடியோ கேமராவில் பதிவாகி தற்போது வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் சக்திவேலிடம் கேட்ட போது, தூய்மை இந்தியா, தூய்மை தமிழ்நாடு திட்டத்திற்காக வாங்கப்பட்ட நிதியை, தம் மேல் உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக லஞ்சம் பெற்றதாக கூறுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close