[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

கேஜிஎஃப்-2 படப்பிடிப்புக்காக பெங்களூரில் பிரம்மாண்ட செட் !

kgf-chapter-2-yash-s-film-goes-on-floors-in-hyderabad

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புக்காக பெங்களூர் மற்றும் ஐதராபாத் நகரில் பிரம்மாண்ட செட் போட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் கன்னட திரையுலகில் பிரம்மாண்டமாக உருவாகி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் கேஜிஎஃப். இந்தப் படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்தார். ‌‌‌இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் வெளியானது. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் கேஜிஎஃப் திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.

                               

பணக்காரனாக துடிக்கும் ஒரு சிறுவன் கேங்க்ஸ்டராக மாறுவதும், பின்னர் தங்கச்சுரங்கத்தை நிர்வகிக்கும் வில்லனை கொல்வதற்காக அவன் இடத்துக்கே செல்லும் கதாநாயகன் அங்கு அடிமைப்பட்டு கிடக்கும் மக்களுக்காக வருந்துவதும், அதன் பின் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் என மாஸ் சினிமாவாக உருவாகி இருந்தது கேஜிஎஃப். வெளியான அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட கேஜிஎஃப்பின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே, கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை கோலார் தங்கச் சுரங்க பகுதிகளில் படப்பிடிப்பு செய்ய நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. படப்பிடிப்பால் தங்களது பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

                                  

இந்நிலையில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புக்காக பெங்களூர் மற்றும் ஐதராபாத் நகரில் பிரம்மாண்ட செட் போட படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் பாகத்தை அதிக பொருட் செலவில் எடுக்கவும் படக்குழு தீர்மானித்துள்ளது. இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளார். அவர் வில்லன் கதாபாத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close