[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

டெல்லி இளைஞரிடம் மன்னிப்பு கோரிய சன்னி லியோன்

sunny-leone-says-sorry-to-delhi-man-for-phone-number-in-arjun-patiala


டெல்லி இளைஞரிடம் பாலிவுட் நடிகை சன்னி லியோன் மன்னிப்பு கோரியுள்ளார்.

கனடா நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து ரோஹித் சுராஜ் சவுகான் இயக்கத்தில் உருவாகியுள்ள அர்ஜூன் பாட்டியாலா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தின் காட்சி ஒன்றில் சன்னி லியோன் தொலைபேசி எண்ணை தெரிவிப்பது போல உள்ளது. அது உண்மையிலேயே சன்னி லியோனின் தொலைபேசி எண் என்று தவறாக புரிந்துகொண்ட ரசிகர்கள் பலர் அந்த எண்ணை தொடர்புகொண்டுள்ளனர். 

ஆனால் அந்த எண் டெல்லியைச் சேர்ந்த புனித் அகர்வால் என்ற இளைஞருக்கு சொந்தமானது. ஒருநாளைக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதால் போலீசில் புகார் அளித்துள்ளார் புனித். பொதுவாக திரைப்படங்களில் பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி எண்ணையே யாராவது சொல்வது போல காட்சி அமைக்கப்படும். இந்த விவகாரத்தில் அர்ஜூன் பாட்டியாலா திரைப்படக்குழு கவனம் செலுத்தாததால் டெல்லி இளைஞர் சிக்கலில் மாட்டியுள்ளார். 

குறிப்பிட்ட தொலைபேசி எண் வர்த்தகம் தொடர்பான எண் என்பதால் தன்னால் எண்ணை மாற்ற முடியாது என்றும், விரைவில் நீதிமன்றத்தை அணுக போவதாகவும் இளைஞர் புனித் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லி இளைஞர் குறித்து கேள்விப்பட்ட சன்னி லியோன், மன்னிப்பு கோரியுள்ளார். ஊடகம் மூலம் வருத்தம் தெரிவித்துள்ள சன்னி, ''மன்னிக்க வேண்டும். உங்களுக்கு இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close