[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

8 நிமிட சண்டைக் காட்சிக்கு ரூ.70 கோடி: பிரபாஸின் ’சாஹோ’ தயாரிப்பாளர் தாராளம்

an-8-minute-long-action-sequence-in-saaho-cost-whopping-sum-of-rs-70-crore

’சாஹோ’ படத்தில் இடம்பெறும் 8 நிமிட சண்டைக்காட்சிக்காக, ரூ.70 கோடி செலவழிக்கப்பட்ட தகவல் இப்போது தெரியவந்துள்ளது. 

பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் பிரமாண்டமான ஆக்‌ஷன் படம், ’சாஹோ’. அவர் ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிக ளில் உருவாகிறது.


இந்தப் படத்தின் பாடல் காட்சிகள், ஆஸ்திரியாவில் படமாக்கப்பட்டன. இதில் இன்னொரு ஹீரோயினும் சேர்ந்திருக்கிறார். அவர் பிரபல இந்தி நடிகை, ஜாக்குலின் பெர்ணான்டஸ்! அவர் சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அனிருத் குரலில், சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ‘காதல் சைக்கோ’ என்ற பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள் ளது.

இந்நிலையில் இந்தப் படத்துக்காக ரூ.70 கோடி செலவில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக, படக்குழு தெரிவித் துள்ளது. அந்த சண்டைக் காட்சி, அபுதாபியில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. சுமார் 60 நாட்கள் நடந்த இந்த சண்டைக் காட்சியை, ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ் பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியள சண்டை இயக்குனர் கென் னி பேட்ஸ் அமைத்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழுக் கூறியுள்ளது.


படத்தில், பிரபாஸின் கேரக்டர், பல அடுக்குகளை கொண்டதும் என்றும் ஸ்ரத்தா, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் தெரிகிறது. ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close