[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

''ஹெட் போனை தயாராக வைத்திருங்கள்'' - 'நேர்கொண்ட பார்வை'  அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

nerkonda-paarvai-edmsong-lyrical-video-will-be-out-today

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மற்றொரு பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். 

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்  தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்துள்ள இந்தப் படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில்‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்  'வானில் இருள்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அந்தப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் படத்தில் மற்றொரு பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உங்களது ஹெட் போனை தயாராக வைத்திருங்கள்.

அஜித்குமாரின் நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் EDM பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது என தெரிவித்துள்ளார். போனி கபூரின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் ரசிகர்கள் பலரும் நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் இரண்டாவது பாடலுக்காக காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close