[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜயின் ‘வெறித்தனம்’- ட்ரெண்டிங்கில் ‘பிகில்’

actor-vijay-sing-song-for-verithanam

‘பிகில்’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தெறி’,‘மெர்சல்’ ஆகிய படங்களுக்குப் பின் இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நயன்தாரா,  நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. போஸ்டரை வைத்து பார்க்கும்போதே விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது தெரியவந்தது. அதில் ஒரு விஜய் கால்பந்தாட்ட வீரராக இருக்கலாம் என்பதையும் நம்மால் உணர முடிந்தது. தற்போது விஜய் ரசிகர்ளுக்கு ஒரு இன்பச் செய்தி வந்திருக்கிறது. அதாவது விஜய் ‘ பிகில்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். தற்போது இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து ஏஜிஎஸ் சினிமாஸின் சிஇஓ ஆன அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ ரசிகர்களிடம் இருந்து வந்த கோரிக்கையை நிறைவேற்றி ‘பிகில்’ படத்தில் பாடலை பாடியுள்ள தளபதிக்கு ஒரு பெரிய நன்றி. உண்மையிலேயே பாடல் ‘வெறித்தனம்’.. ஏ.ஆர்.ரஹ்மான் சார், அட்லீ, பாடலாசிரியர் விவேக் ஆகியோருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பிகில்’ படத்தில் விஜய் பாடியுள்ளார் என்ற செய்தி வெளியானதுமே வழக்கம்போல ட்ரெண்டிங்கிலும் இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. “வெறித்தனம்’’, “பிகில்”, “தளபதி” போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close