‘எஸ்கே17’ படத்திற்கான கதை திரைக்கதை முடிவடைந்துவிட்டது என இயக்குனர் விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராமில் தகவல் தெரிவித்துள்ளார்.
‘போடா போடி’, ‘நானும் ரௌடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் இப்போது சிவகார்த்திகேயனைவைத்து புதியதாக ஒரு படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இவரது நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. ஆகவே அப்படம் குறித்த செய்திகள் அனைத்தும் ‘எஸ்கே17’ என்ற பெயரில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தற்போது ‘எஸ்கே17’ படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் தொடர்பான வேலைகள் முடிவடைந்துவிட்டது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
அதில் ‘எஸ்கே17’ படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் இறுதியாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. திரைக்கதைகள் எப்போதும் பறவைகளை போன்று இருக்கின்றன. அந்தப் பறவைகளை தனிமையில்விட வேண்டும். அப்போதுதான் அவை நீண்ட தூரம் பறந்து பல எல்லைகளை தாண்டும். ஆனால் தற்போது நான் வேறு மாதிரி உணர்கிறேன். சில கதைகள் பறவைகள் போன்றது. சில கதைகள் பட்டாம் பூச்சிகளை போன்றது. சில கதைகளோ டைனோசர் போன்றது.
எனவே கதைகளில் சிலவற்றை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவை பின்னாளில் நமக்கு பிரச்னை கொடுக்காமல் இருக்கும். இந்தக்கதை அந்த வகையை சேர்ந்ததுதான். எல்லா கதைகளுமே எனது மனதிற்கு நெருக்கமானவைதான். ஆனால் இக்கதை என் மனதை திறந்துவிட்டது. என்னை உயிர்ப்புடனும் இருக்க வைத்தது. உணர்ச்சிப்படவைத்தது. மேலும் எப்படி நான் நம்ப முடியாத சூழ்நிலைகள் தற்போது எனது வாழ்வில் சாத்தியமாகி உள்ளன என்று சிந்திக்க வைத்தது.
இந்தப் பயணத்தின் போது சில நாட்களை எழுவதற்காக நான் திட்டமிட்டு வைத்திருந்தேன். ஆனால் பயணமே அதிக நாட்களை எடுத்து கொண்டது. இது எதிர்பார்க்காததுதான். ஆனால் எனது வாழ்வின் மிகச்சிறந்த நாட்களாக இதை கருதுகிறேன். கேன்சில் தொடங்கி பல நாடுகளுக்கு நான் பயணம் செய்து விட்டேன்.
எந்தெந்த வாகனங்களில் பயணிக்க வேண்டுமோ, அனைத்திலும் பயணித்து விட்டேன். எனது மொத்த காதலும் தற்போது இந்தக் கதையின் மீதுதான் உள்ளது. மிகவிரைவில் நான் எனது குழுவினருடன் ‘எஸ்கே17’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள போகிறேன். உலகம் முழுவதும் உள்ள மிக நல்ல அனுபவங்களை நான் சேகரித்து வந்துள்ளேன். அந்த வகையில் மிகப்பெரிய உழைப்புடன் நான் சென்னைக்குள் நுழைய போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் நயன்தாராவுடன் வெளிநாட்டு பயணத்தின் போது விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!