[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடும் வெயிலில் 70 நாட்களை தாண்டி விஜய் படப்பிடிப்பு -  ‘தளபதி63’ அப்டேட்ஸ் 

vijay-begins-fourth-schedule-of-thalapathy-63

முழு வீச்சுடன் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 63’. அதை பற்றி அப்டேட்ஸ் வெளியே வருகிறதோ இல்லையே அதற்கு முன்பே அந்தப் படம் குறித்த சில எதிர்மறையான செய்திகள் முந்திக் கொண்டு முன்னுக்கு வந்து விடுகின்றன. காரணம், விஜய் ஒரு வைரல் கண்டெண்ட். ஆகவேதான் அவரை அரசியல்வாதிகள் கூட டார்கெட் செய்கிறார்கள். எவ்வளவுதான் சர்ச்சைகள் வலுத்தாலும் வழக்கமாக விஜய் எப்போதும் சைலண்ட். அவரின் அமைதிதான் அவருக்கு இவ்வளவு ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. 

வழக்கமாக சென்னைப் படப்பிடிப்பு தளங்களில் விஜய் பங்கேற்கும்போது தன் நடமாட்டத்தை அதிகம் வெளிப்படையாக வைத்துக் கொள்ள மாட்டார். அப்படி அவரின் தலை வெளியே தெரிய ஆரம்பித்தால் அவ்வளவுதான் கூட்டம் மாநாடு போல கூடி விடும். ஆனால் இந்தத் ‘தளபதி63’ கொஞ்சமல்ல அதிகம் ஸ்பெஷல் அவரது ரசிகர்களுக்கு. அவர் சென்னையை சுற்றி நடந்த ‘தளபதி 63’ படப்பிடிப்புக்கு வரும் போது எல்லாம் கூடி இருந்த தன் ரசிகளை அதிகம் கவனித்தார். நெருங்கி வந்து கையசைத்தார். அவ்வளவு ஏன் கார் கதவை திறந்து கொண்டு வந்து வெளியே புன்னகைத்தார். அந்தளவுக்கு விஜயின் செயல்பாடுகளில் மாற்றம் வளர்ந்திருக்கிறது. 

அந்த மாற்றத்தின் அடையாளம்தான் அவரது படப்பிடிப்புத்தளத்தில் விபத்தில் சிக்கிய எலெக்ட்ரீஷியனை மருத்துவமனைக்கே சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில்தான் விஜய், ‘தளபதி63’ படப்பிடிப்பில் இருந்து வீட்டிற்கு விரைவில் திரும்ப உள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோடைக்கு பிறகே ஆரம்பமாகும் என்றும் பேச்சு அடிப்பட்டது. கத்தரி வெயிலின் வெப்பம் வாட்டி வதைக்கும் போது கொஞ்சம் பிரேக் எடுத்து திரும்புவத்தே விஜய்க்கு நல்லது என்றும் படக்குழு திட்டமிட்டதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் தனக்கு பிரேக் வேண்டாம் என கூறிவிட்டதாக தெரிகிறது. வெயில் பற்றி கவலை இல்லை. எனக்கு ரசிகர்கள் மகிழ்ச்சிதான் முக்கியம். அப்படியே படப்பிடிப்பை தொடரலாம் என்றும் அவர் பேசியதாக தகவல் கசிந்தது. 

இந்த நிலையில்தான், அதிகாரபூர்வமான ஒரு செய்தி ‘தளபதி63’ குறித்து வெளியாகி உள்ளது. அவரது மேனேஜர் ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், “தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக ‘தளபதி63’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது 4வது கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம். எங்களின் கடினமான உழைப்பு முழுக்க திரையரங்கங்களில் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவதற்காகதான். படம் குறித்த அறிவிப்புகள், அடுத்தடுத்த செய்திகள் தக்க நேரத்தில் வெளியாகும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள். படம் வெளியாகும் வரை வதந்திகளை நம்பாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இடைவிடாமல் விஜய் 70 நாட்களாக படப்பிடிப்பில் இருப்பதை கேள்வி பட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் நனைகிறார்கள். கோடை வெயிலில் அவர்களுக்கு இந்தச் செய்தி குளுகுளுப்பாக அமைத்திருக்கிறது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close