[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

“அச்சமில்லை அச்சமில்லை படத்தை எடுப்பதற்கு துணிச்சல் வேண்டும்” - கமல் பாராட்டு

achchamillai-achchamillai-teaser-launched-by-dhanush

அச்சமில்லை அச்சமில்லை படத்தை எடுப்பதற்கு துணிச்சல் வேண்டும் என்பது மட்டுமல்லாமல் நேர்மை வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்தை முத்து கோபால் இயக்குகிறார்.  நடிகை சாந்தினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் இயக்குனர் அமீர் அரசியல் பிரமுகராக நடித்து வருகிறார். நொய்யல் ஆறு மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகளின் பிரச்னைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

 

இந்த நிலையில், இந்தப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இந்த டீஸரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். `நடிகர் சங்க பிரச்னையை நாட்டுப் பிரச்னையாக மாத்திய புண்ணியவான்களே' என அமீர் சொல்லும் வசனத்துடன் டீசர் ஆரம்பிக்கிறது. இந்த படத்தில் விவசாயிகளின் பிரச்னை, மணல் கொள்ளை, டாஸ்மாக், தண்ணீர் பிரச்னை என நாட்டில் நடக்கும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

படம் குறித்து நடிகர் கமல், “அச்சமில்லை அச்சமில்லை படம் எடுக்கவே துணிச்சல் வேண்டும். மேலும் நேர்மை வேண்டும்” என பேசிய பேட்டியும் டீசரில் இடம்பெற்றுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Achchamillai achchamillaiKamalAmeerTeaserDhanushLaunch
Advertisement:
Advertisement:
[X] Close