[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

“மலையாள நடிகர்களை விட விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம்”- எம்எல்ஏ பேச்சு

kerala-mla-says-vijay-fan-base-in-kerala-is-more-than-malayalam-stars

கேரளாவில் மலையாள நடிகர்களை காட்டிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என கேரள எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய்க்கு எப்போதுமே தனி மவுசு. அதேபோல  விஜய் படம் வெளியாகும்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்த்து விடுவர். இதுமட்டுமின்றி தியேட்டர்களில் விஜய் படத்திற்கு கட்அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என விஜய் மீதான தங்கள் அன்பை ரசிகர்கள் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்தான்.

இந்நிலையில் கேரளாவில் மலையாள நடிகர்களை காட்டிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என கேரள எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எம்எல்ஏ பிசி ஜார்ஜ் கூறும்போது, “ தியேட்டர்களில் விஜய் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை நான் உள்பட பலர் பார்த்துள்ளோம். உண்மையில் கேரளாவில் மலையாள நடிகர்களை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்” எனத் தொரிவித்தார்.

இதனிடையே மோகன் லால் மற்றும் மம்மூட்டி ரசிகர்கள் எம்எல்ஏ பிசி ஜார்ஜ் கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.  அதில்“விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் தான். அதேசமயம் மலையாள நடிகர்களை விட அதிக ரசிகர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close