[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி?

rajinikanth-to-team-up-with-kaarthik-subburaj-again

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

சமீப காலமாக ரஜினிகாந்தின் திரைப்படங்கள் அடிக்கடி வெளியாகின்றன. மிகப்பெரிய இயக்குநர்களுடன் மட்டுமே இணைவேன் என்ற கட்டுப்பாடு இல்லாமல் ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் என அடுத்தடுத்து ரஜினிகாந்த் வித்தியாசம் காட்டி வருகிறார். ஷங்கரின் அதிக பட்ஜெட்டில் உருவான 2.0க்கு அடுத்த சில மாதங்களிலேயே கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ திரைப்படமும் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான‘பேட்ட’ ட்ரெய்லர் ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து இயக்குநர் முருகதாஸுடன் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்தப்படம் ரஜினியின் அரசியல் வரவை மையப்படுத்தி உருவாக உள்ளதாகவும், அப்படத்துக்கு ‘நாற்காலி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தற்போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருவதால் அவர் சென்னை திரும்பியதும் அடுத்தப்படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்படி ரஜினிகாந்த் வரும் 8ம் தேதி சென்னை திரும்புகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் - ஏ.ஆர் முருகதாஸ் இணையும் புதுப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாகவும் அதை முடித்துக்கொண்டு தன்னுடைய 167வது படத்துக்காக கார்த்திக் சுப்புராஜூடன் இரண்டாவது முறையாக கைக்கோர்க்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே இயக்குநர் ரஞ்சித்துடன் அடுத்தடுத்து ரஜினிகாந்த் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close