[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்த வருடம் டாப் ஹீரோயின் யார்?

2018-movie-data-who-is-top-heroine-of-this-year

நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் அதிக படங்களில் நடித்துள்ளார். அவர் ஏழு படங்களில் நடித்திருக்கிறார்

சினிமாவில், ஹீரோயின்கள் அதிகமானப் படங்களில் நடிப்பது கடினம். சில ஹீரோயின்கள் மட்டுமே அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய ஹீரோயின்கள் அறிமுகமாவதால் ஹீரோயின்களுக்கான போட்டி அதிகம்.

இந்நிலையில் இந்த வருடம் கீர்த்தி சுரேஷ், அதிக படங்களில் நடித்துள்ளார். அவர் ஏழு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள படங்கள்: அக்னியாதவாசி (தெலுங்கு), தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், சீமராஜா (கெஸ்ட் ரோல்).

இவரை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி, சாமி ஸ்கொயர், வட சென்னை, செக்க சிவந்த வானம், கனா ஆகிய ஐந்து படங்களில் நடித்துள்ளார்.

நடிகை வரலட்சுமியும் ஐந்து படங்களில் நடித்துள்ளார். அவர், ’மிஸ்டர் சந்திரமவுலி’, ’எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’, சர்கார், சண்டக்கோழி 2, மாரி 2 படங்களில் நடித்திருக்கிறார்.

முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, சமந்தா ஆகியோர் இந்த வருடம் குறைவான படங்களிலேயே நடித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close