[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

ராயல்டி எங்களுக்கு வேணும்: இளையராஜா மீது வழக்கு!

case-against-ilayaraja-for-royalty-issue

பாடல்கள் மூலம் வரும் ராயல்டி தயாரிப்பாளர்களின் உரிமை என்றும் அது தங்களுக்கே வரவேண்டும் என்று தயாரிப் பாளர்கள் சிலர் இளையராஜா மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

பாடல்களின் மூலம் வரும் ராயல்டி தொகையை மீட்க தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில், அன்புச்செல்வன், ஜெப ஜோன்ஸ், மீராகதிரவன், மணிகண்டன், சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழு, இளையராஜா மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ’’ இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசை அமைத்த படங்களின் பாடல்கள் உரிமையும் அதன் மூலம் வரும் வருவாயும் தனக்கே வேண்டும் என்று கோரி வருகிறார். இளையராஜாவை வைத்து படமெ டுத்த தயாரிப்பாளர்களுக்கு அந்த வருவாய் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த பல தயாரிப்பாளர்கள் கஷ்டமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.

இளையராஜா பரிந்துரையின்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை எக்கோ கம்பெனிக்கு வழங்கினர். அதில் வரும் ராயல்டி 50 சதவிகித பங்கு இதுவரை எந்த தயாரிப்பாளர்களுக்கும் முறையாக வந்ததில்லை. இனி வரும் காலங்களில், பாடல்களின் மூலம் வரும் வருவாய் 25 லட்சம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமானம் தயாரிப் பாளர்களுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.

பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களை சாருமே தவிர, சம்பளம் வாங்கி இசையமைத்த இளையராஜாவுக்கு சேராது. இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய ராயல்டி பணம் ஏமாற்றப்பட்டிருக்கிறது. கச்சேரி, காலர் டியூன், பாடல் ஒலிபரப்புகள் மூலம்  வரும் வருவாயில் தங்களுக்கு உரிய பங்கு வரவேண்டும்’’  என்று தெரிவித்துள்ளனர்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close