[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

தீபிகா - ரன்வீர் ஜோடி திருமண நிகழ்ச்சி: இத்தாலியில் பலத்த பாதுகாப்பு

deepika-padukone-and-ranveer-singh-exchange-rings-before-tying-the-knot-in-italy

தீபிகா - ரன்வீர் ஜோடியின் திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தி நடிகை தீபிகா படுகோனும், பிரபல இந்தி பட ஹீரோ ரன்வீர் சிங்கும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் சென்று வந்தனர். இவர்கள் பற்றிய காதல் செய்திகள் வெளியானபோதும் அதுபற்றி வாய் திறக்காமல் தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தீபிகா படுகோனும்,ரன்வீரும் தங்கள் திருமண தேதியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அதில், ’எங்கள் திருமணம் 2018, நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்கள் மீது காட்டிய உங்கள் அன்புக்கு நன்றி. எங்களின் வாழ்க்கை பயணம் அன்பாகவும், நட்புடனும், ஒற்றுமையுடன் செல்ல உங்கள் ஆசியை வேண்டுகிறோம். அன்புடன் தீபிகா, ரன்வீர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி இன்றும் நாளையும் தீபிகா - ரன்வீர் ஜோடியின் திருமண நிகழ்ச்சிகள் இத்தாலியின் லோக் கோமா பகுதியில் உள்ள காஸ்டாதிவா ரிசாட் மற்றும் வில்லா தி எஸ்ட் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. முதல்நாளான இன்று திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருமண ஜோடியாக தீபிகாவும், ரன்வீரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

இந்த திருமணத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக தலைவர்களின் சந்திப்புகளின் போது கொடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இணையாக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு பிரத்யேகமாக கையில் மாட்டிக்கொள்ளக்கூடிய வளையம் கொடுக்கப்படும் என்றும், செல்போன்களின் கேமரா ஸ்டிக்கர்கள் கொண்டு மறைக்கப்பட்டப்பிறகே அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அழைப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கு பார் கோடுடன் கூடிய பத்திரிகைகையும் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்காக லேக் கோமோவிற்கு வருகை தருபவர்கள் பார் கோட் உதவியுடன்மட்டுமே உள்நுழைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமணம் நடைபெறும் இடம் பெரிய ஏரியின் நடுவில் அமைந்துள்ளதால் படகில் முழு நேரப்பாதுகாப்புக்கு ஆட்கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் வெளி ஆட்களுக்கு படகுகள் வாடகை விடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமண விழாவில் பாடல் நிகழ்ச்சி நடத்தவுள்ள பாடகர் ஹர்ஸ்தீப் கார் திருமணம் நடக்கவுள்ள இடத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். பாதுகாப்பு நடவடிக்கையின்படி பின்னர் அந்த புகைப்படம் நீக்கப்பட்டது.

இந்நிலையில் திருமணத்துக்கு முக்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் வரலாம் என்றும், அனைவரும் லேக் கோமோவில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, தீபிகா - ரன்வீர் ஜோடிக்காக அமிர்தசரஸ் ஓவியர் ஜக்ஜோட் சிங் ருபல் பிரம்மாண்ட ஓவியம் ஒன்றினை தயார் செய்துள்ளார். இந்த பிரம்மாண்ட ஓவியத்தை திருமண பரிசாக அவர் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளார். 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close