[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

பாக்யராஜின் ராஜினாமா ஏற்க மறுப்பு  - பொதுச்செயலாளர் அறிவிப்பு 

director-k-bhagyaraj-has-resigned-letter-is-not-accepted-in-association

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா செய்ததை ஏற்க முடியாது என்று சங்கம் மறுத்துள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இதனிடையே, செங்கோல் என்ற கதையும், ‘சர்கார்’ படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்தது. இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு, வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டது. அதில், தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம் என்று தெரிவித்திருந்தது. 

அத்தோடு, முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கே.பாக்யராஜின் கடிதத்துக்கு பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கதை என்னுடையது தான் என்று முருகதாஸ் பிடிவாதமாக இருந்த நிலையில் ‘செங்கோல்’ என்ற கதையும், ‘சர்கார்’ படக் கதையும் ஒன்றுதான் என பாக்யராஜும் தனது கருத்தில் உறுதியாக இருந்தார். இதனையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியில் இந்தப் பிரச்னை சுமூகமாக பேசி தீர்க்க முடிவானது. 

அதன்படி ‘சர்கார்’ படத்தின் டைட்டில் கார்டில் "நன்றி ராஜேந்திரன்" என்ற பெயரை போட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டார். ஆகவே இதுதொடர்பான வழக்கு சமரசத்தில் முடிந்தது. 

இந்நிலையில் இந்தப் பிரச்னையில் தீவிரமாக நின்று போராடியதற்காக இயக்குநர் பாக்யராஜூக்கு பல மட்டங்களில் இருந்து ஆதரவுகள் கிடைத்து வந்தன. அந்த நேரத்தில் திடீரென்று தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக இயக்குநர் கே.பாக்யராஜ் இன்று அறிவித்தார். அவரது நடவடிக்கை தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்ததை திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என அதன் பொதுச்செயலாளர் மனோஜ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்தோம். அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். 

மேலும் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் உங்களது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதில்லை. நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என்று அனைவரும் தெரிவித்த கருத்தையே செயற்குழுவின் தீர்மானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 
எனவே எப்போதும் போல தாங்களே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடர்கிறீர்கள் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம் ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close