[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

வாழ்த்துகளில் நனையும் பாடகி விஜயலட்சுமி!

singer-vaikom-vijayalakshmi-ties-the-knot

பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி -அனூப் திருமணம் நேற்று நடந்து. மணமக்களுக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

பிருத்விராஜ் நடித்த ’ஜே.சி.டேனியல்’ படத்தில் இடம்பெற்ற ’காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம்  பாடகியாக அறிமுகமானவர் மலையாள பாடகி, வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர், அடுத்து ’வீர சிவாஜி’ படத்தில் ’சொப்பன சுந்தரி நான் தானே’, ’என்னமோ ஏதோ’ படத்தில் ’புதிய உலகை புதிய உலகை’ உட்பட தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார்.

Read Also -> அர்ஜுன் மீதான பாலியல் புகார் ! கர்நாடக திரைப்பட வர்த்த சபை முக்கிய முடிவு..!  

தமிழ், மலையாளத்தில் தனது வித்தியாசமான குரல் மூலம் பிரபலமான இவரது வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதை விஜயகுமார் இயக்குகிறார்.  விஜயலட்சுமியாக, மீன் விற்றுப் படிக்கும் மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார்.

Read Also -> லீனா மணிமேகலையின் பாலியல் புகார்.. ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு சுசி கணேசன் வழக்கு 

இந்நிலையில் விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடை பெற்றது. கருத்துவேறுபாடு காரணமாக தனது திருமணம் நின்றுவிட்டதாக வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அனூப், இன்டீரியர் டெக்கரேஷன் கான்ட்ராக்டராகவும் இருக்கிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் விஜயலட்சுமியின் வீட்டில் கடந்த மாதம் நடந்தது. திருமணம், வைக்கம் மகாதேவ கோயிலில் நேற்று காலை நடந்தது. 

Read Also -> “மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான் 

இதில் பாடகர் யேசுதாஸ், அவர் மனைவி பிரபா, விஜய் யேசுதாஸ், இசை அமைப்பாளர் எம்.ஜெயச்சந்திரன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பன்னியன் ரவீந்திரன் உட்பட பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களும் கூடி மணமக்களை வாழ்த்தினர். சமூகவலைத்தளங்களிலும் நடிகை மஞ்சுவாரியர் உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close