மலையாள நடிகர் திலீப் மீண்டும் அப்பாவாகிறார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். இவர், சக நடிகை மஞ்சு வாரியரை காதலித்து கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் உள்ளார். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மகள் மீனாட்சி திலீப்புடன் உள்ளார். இவர்கள் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவ ன்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர்.
(மஞ்சு வாரியர்)
காவ்யா மாதவன் கடந்த 2010-ல் தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து துபாய் சென்ற காவ்யா மாதவன் சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து கேரளா வந்துவிட்டார். தனியாக வாழ்ந்து வந்த திலீப் - காவ்யா மாதவன் இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி எனது மகளின் முடிவை பொறுத்தே நான் மறுமணம் செய்வேன் என்று திலீப் கூறியிருந்தார். அதன்படி 2016ஆம் ஆண்டு காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தார். இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் காவ்யா கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குழந் தையை வரவேற்க இரண்டு பேர் குடும்பமும் தயாராகி வருகின்றன.
புல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு
சிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்
“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி
“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்
தமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !