[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

கேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்

thalapathy-vijay-donates-70-lakhs-to-kerala-relief-funds

கேரளாவில் கடந்த சில நாட்களாக, வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்திற்கு பல அண்டை மாநிலங்களும் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த பல முண்ணனி நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

Also Read -> மத நம்பிக்கை பற்றி அப்பாவுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு: ஸ்ருதிஹாசன்!

Also Read -> நிவாரணப் பணிகளுக்காக திருமணத்தை தள்ளி வைத்த நடிகர்! 

இந்நிலையில், நடிகர் விஜய் கேரள நிவாரண நிதிக்காக ரூ70 லட்சம் அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ரசிகர்மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் உள்ள ரசிகர் மன்ற நீர்வாகிகளின் வங்கி கணக்கில் தலா ரூ.3 லட்சம் வீதம் அவர் நிதியுதவி அளித்துள்ளார். 

முன்னதாக நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் அளித்ததே தமிழக சினிமா நட்சத்திரங்களில் அதிக நிதியுதவியாக இருந்தது. இந்நிலையில், தமிழக சினிமா வட்டாரத்தில் நடிகர் விஜய் அதிகபட்சமாக நிதியுதவி அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் இருந்து ரஜினி ரூ15 லட்சம், கமல் ரூ.25 லட்சம், விஜய் சேதுபதி ரூ.25 லட்சம், விக்ரம் ரூபாய் 35 லட்சமும் ஏற்கெனவே கேரள வெள்ள பாதிப்புக்காக நிதியுதவி அளித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Thalapathy VijayVijay DonatesActor Vijay
Advertisement:
Advertisement:
[X] Close