[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

சானியாவாக நடிக்கிறார் சானியா மிர்ஸா?

sania-mirza-to-play-herself

’பயோபிக்’ சீசன் இது! சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை சினிமா ஆக்குவதில் பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி வெளியான சில பயோபிக் படங்கள் வசூலை வாரி குவித்துள்ளதால் இந்த போக்கு இப்போது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. 

சச்சின் வாழ்க்கை வரலாறு, தோனியின் வாழ்க்கை வரலாறு, சமீபத்தில் வெளியான சஞ்சய் தத்தின் வாழ்க்கைக் கதையான சஞ்சு, முன்னாள் ஹீரோயின் சாவித்ரியின் வாழ்க்கைக் கதையான ’நடிகையர் திலகம்’ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. இதனால் மாநில மொழிகளிலும் இதுபோன்ற படங்களை உருவாக்க தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர்.

குத்துச்சண்டை வீராங்கனை ’மேரி கோம்’ வாழ்க்கை அவர் பெயரிலேயே சினிமாவானது. இதில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அடுத்து பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடித்துவருகிறார். துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவின் வாழ்க்கைக் கதையில் ஹர்ஷ்வர்தன் கபூர் நடித்துவருகிறார்.

மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் டாப்ஸி நடிப்பார் என்று தெரிகிறது. மற்றொரு பேட்மின்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் வாழ்க்கை கதையும் சினிமாவாகிறது. இதை பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். இதில் தீபிகா படுகோன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதே போல இன்னும் சில விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது.

அந்த வரிசையில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. பல்வேறு சினிமா நிறுவனங் கள் அவர் வாழ்க்கை கதையை படமாக்க அனுமதி கேட்டு காத்திருந்த நிலையில், ரோனி ஸ்குருவாலாவின் ஆர்எஸ்விபி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு சானியா ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் உரிமைக்காக சானியாவுக்குப் பெரும் தொகைக் கொடுக்கப்பட இருக்கிறது.

இதில் அவரையே சானியாவாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிப்பதற்கு சானியா இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அவரை சம்மதிக்க வைக்கும் முயற்சிகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close