[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

ஹர்திக் பாண்ட்யாவுடன் எப்போது திருமணம்? ஹீரோயின் விளக்கம்!

esha-gupta-to-marry-hardik-pandya

கிரிக்கெட் வீரர்கள் ஹீரோயின்களை காதலிப்பது வழக்கமாக நடப்பதுதான். ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், இப்போதைய கேப்டன் விராத் கோலி உட்பட பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். சில வீரர்கள் மட்டுமே வீட்டில் பார்த்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்கின்றனர். அந்த (ஹீரோயின்களை காதலிக்கும்) லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.

முதலில் இந்தி நடிகை பரினீதி சோப்ராவை இவர் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதை இருவருமே மறுத்தனர். இந்நிலையில் இந்தி நடிகை எல்லி அவ்ரமை காதலித்து வருவதாகத் தகவல் பரவியது. எல்லி அவ்ரம், கிஸ் கிஸ்கோ பியார் கரூன், நாம் ஷபானா, போஸ்டர் பாய்ஸ் உட்பட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் ’குயின்’ ரீமேக்கான ’பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்துவருகிறார். இருவரும் இந்தக் காதல் செய்தியை மறுக்கவில்லை. 

தென்னாப்பிரிக்கத் தொடருக்காக, ஹர்திக் பாண்ட்யா விளையாடச் செல்லும்போது, அவரும் எல்லியும் ஒரே காரில் மும்பை விமான நிலையத்துக்கு வந்தனர். பாண்ட்யா மட்டும் காரில் இருந்து இறங்கிக் கொள்ள, எல்லி அவருக்கு கை காட்டி விடைகொடுத்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கின. 

இந்நிலையில் இருவருக்கும் பிரேக் அப் என்று பாலிவுட் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டது. பிறகு சிங்கிளாக இருந்த ஹர்திக், இந்தி நடிகை ஈஷா குப்தாவை காதலிக்கத் தொடங்கினார். இதுபற்றி பாலிவுட்டில் செய்திகள் வெளியாயின. இதை இருவரும் மறுக்கவில்லை.

ஈஷா குப்தா, ராஸ் 3டி, ஹம்ஷகேல்ஸ், பேபி, ரஸ்டம், பாட்ஷஹோ, கமாண்டோ 2 உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரபுதேவா, தமன்னா நடித்து வெளியான ’தேவி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவரும் ஹர்திக்கும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி ஈஷா குப்தாவிடம் கேட்டபோது, ’ இப்போது திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இல்லை. நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரியபடுத்துகிறேன்’ என்றார். ஹர்திக் பாண்ட்யா பற்றி பேச மறுத்துவிட்டார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close