[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜோதிகா.. பரிசு கொடுத்து அசத்தல்..!

jyothika-completes-shooting-for-kaatrin-mozhi

‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் தான் சார்ந்த படப்பிடிப்புகளை நிறைவு செய்துள்ளார் நடிகை ஜோதிகா.

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘மொழி’. இந்தப் படத்துக்கு பிறகு ஜோதிகாவுடன் ராதாமோகன் மீண்டும் இணையும் படத்துக்கு ‘காற்றின் மொழி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி தொடங்கியது. வெவ்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டன. மற்ற கலைஞர்களை வைத்து இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற தும்ஹரி சுலு (Tumhari Sulu) படத்தின் ரீமேக் தான் காற்றின் மொழி. குடும்பத் தலைவியாக இருக்கும் பெண் ஒருவர் தன்னை வெளியில் அடையாளப் படுத்திக் கொள்ள எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்ற கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் இது எனத் தெரிகிறது.

கடந்த 25-ஆம் தேதியே ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது கடைசி நாள் படப்பிடிப்பில் ஜோதிகா படக்குழுழுவில் உள்ளவர்களுக்கு சேலை மற்றும் வேட்டியை பரிசாக அளித்து அசத்தியுள்ளார். இதுமட்டுமில்லாமல், படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு பரிசினையும் அளித்துள்ளார் ஜோதிகா. தனது கேரியரில் சிறந்த படக்குழுவாக இது இருந்தது என்றும் ஜோதிகா பெருமையுடன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

 

பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பாக ஜி.தனஞ்செயன் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் கே.எல்.பிரவீண், ஒளிப்பதிவாளர் மகேஷ் என பலரின் முயற்சியில் இப்படம் உருவாகியுள்ளது. அக்டோபர் 18-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close