[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைக்க இருக்கும் சல்மான்கான்!

salman-khan-s-race-3-does-great-business-at-box-office-mints-rs-67-crore-in-just-two-days

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் வெளியான ரேஸ்-3 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாலிவுட்  ‘தல-தளபதி’ என்றால் அது சல்மான்-ஷாருக்தான். இவர்களுடைய படம் வெளியாகும் போதுதெல்லாம் யாருடைய படம் அதிகம் வசூல் ஈட்டியது என்ற சண்டை அவர்கள் ரசிகர்கள் இடையே எழுவது வழக்கம். ஆனாலும் பாலிவுட்டின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான அமீர்கான்தான் இப்போதைக்கு அதிக வசூல் ஈட்டிய வரிசையில் முன்னால் நிற்கிறார். 

நல்ல கதை அம்சமுள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்யும் அமீர்கான், கடைசியாக நித்தேஷ் திவாரி இயக்கத்தில் நடித்து வெளியான 'தங்கல்' திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆஃபீசில் புதிய வரலாற்றை எழுதியது. இதற்கு முன் இல்லாத வகையில் சீனாவில் மட்டும் சுமார் 750 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. சுமார் 1700 கோடி வசூலுடன் இந்தி சினிமாவில் அதிகம் வசூல் ஈட்டிய நடிகர் என்ற பெருமையை பெற்றார் அமீர்கான். இந்த நிலையில் அண்மையில் வெளியான ரேஸ்-3 திரைப்படத்தின் மூலம் சல்மான் கான் புதிய சாதனையை படைக்க இருக்கிறார். 

நடனக் கலைஞர் ரிமோ டிஸோசா இயக்கத்தில் சல்மான் நடிப்பில் வெளியான படம் ரேஸ்-3. அதிரடி காட்சிகள் அதிகம் நிறைந்த படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடித்துள்ளார். அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப்படம் ரம்ஜான் பண்டிகை அன்று திரைக்கு வந்தது. நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 67 கோடியே 31 லட்சம் ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது. தனது வசூல் வேட்டையை தொடரும் ரேஸ் - 3 வரும் காலங்களில் 100 கோடி ரூபாய் வசூலை எளிதாக எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சல்மானின் முந்தைய சாதனை படங்களான தபாங், பாடிகார்ட், ஏக் தா டைகர் வரிசையில் ரேஸ் - 3 இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, 13ஆவது முறையாக 100 கோடியை எட்டும் முதல் இந்திய நடிகர் சல்மான்கான் என்ற நிலையை அவர் தொட இருக்கிறார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close